மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி : ஒய்.எம்.சி.ஏ. மற்றும் ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ அணிகள் வெற்றி

கோவை : கோவையில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் அணிகள் வெற்றி பெற்றன.

கோவை : கோவையில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் அணிகள் வெற்றி பெற்றன.

கடந்த 15-ம் தேதி முதல் ராஜலட்சுமி விளையாட்டு மையம் சார்பில் கோவை நேரு மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் இந்தத் தொடரில் 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஆண்கள் பிரிவில் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் அணி 84-55 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை தோற்கடித்தது. இதேபோல, யுனைடெட் கூடைப்பந்து கிளப் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. அணிகளும் வெற்றி பெற்றன. 

Newsletter