பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி : டை பிரேக்கரில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி அணி த்ரில் வெற்றி

கோவை : மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்டு வரும் கால்பந்து போட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரான ஆட்டத்தில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி அணி த்ரில் வெற்றி பெற்றது.

கோவை : மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்டு வரும் கால்பந்து போட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரான ஆட்டத்தில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி அணி த்ரில் வெற்றி பெற்றது. 



கோவை மாவட்ட கால்பந்து கிளப் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி கோவை நேரு மைதானத்தில் நடந்து வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் பிச்சனூர் அரசு உயர்நிலைப் பள்ளி அணியும், எஸ்.பி.ஓ.ஏ. அணியும் மோதின. போட்டியின் இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்ததால், ஆட்டம் டை பிரேக்கர் சுற்றுக்கு சென்றது. அதில், 4-3 என்ற கோல் கணக்கில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி அணி த்ரில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 



இதேபோல, கோபால் நாயுடு உயர்நிலைப் பள்ளி அணி 9-0 என்ற கணக்கில் பிருந்தாவன் வித்யாலயாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் சி.எம்.எஸ். மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆஷ்ரம் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் 1-1 என்ற சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற டை பிரேக்கர் சுற்றில் 5-4 என்ற கோல் கணக்கில் சி.எம்.எஸ். அணி வெற்றி பெற்றது.



Newsletter