தேசிய அளவிலான டென்னிஸ் தொடரில் ரன்ஜீத் சாம்பியன்

கோவை : அனைத்து இந்திய அளவிலான டென்னிஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வி.எம். ரன்ஜீத் சாம்பியன் பட்டம் வென்றார்.

கோவை : அனைத்து இந்திய அளவிலான டென்னிஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வி.எம். ரன்ஜீத் சாம்பியன் பட்டம் வென்றார். 

கோவை மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் சார்பில் கடந்த 15-ம் தேதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ், டெல்லி மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். ஒற்றையர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ரன்ஜீத் மற்றும் ஆந்திராவின் கஷா விநாயக் ஷர்மா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரன்ஜீத் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 



இதேபோல, ஒற்றையர் பிரிவில் கவின் மற்றும் ஃபகத் இணை 1-6,7-5,10-3 என்ற கணக்கில் அதர்வா மற்றும் அர்மான் இணையை வீழ்த்தி மகுடத்தைச் சூடியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Newsletter