பாரதியார் பல்கலைக் கல்லூரிகளுக்கு இடையே சதுரங்க விளையாட்டுப் போட்டி

கோவை, காரமடை பகுதியில் உள்ள ஆர்.வி கலை கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டது. 



 
கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் மூன்று நாள் நடக்க இருக்கும் சதுரங்க விளையாட்டுப் போட்டியை ஆர்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன்  இன்று தொடங்கி வைத்தார்.




இப்போட்டியில், மாவட்டத்தில் உள்ள  பாரதியார் பல்கலைக்கழகத்தின் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பங்கேற்கின்றன. இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. குழு போட்டிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் போட்டிகள் நடைபெறும். குழு போட்டிகள் இன்றும், தனிப்பட்ட போட்டிகளில் நாளை ஆரம்பிக்கப்படும். தனிப்பட்ட போட்டியில் வெற்றி வென்றவர்கள் 'அகில இந்திய பல்கலைக்கழக செஸ் போட்டி' பல்கலைக்கழகத்தில் தகுதி பெறுவார்கள்.
இதன் நிறைவு விழா அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 




தொடக்க விழாவில், ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்ஆனந்தகோபால், ஆசிரியர்கள்  மற்றும் கல்லூரி மாணவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter