பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தொடக்கம்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 11-வது 'கிட்டு கோப்பை'க்கான கால்பந்து போட்டி கோவை நேரு மைதானத்தில் நேற்று தொடங்கியது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 11-வது 'கிட்டு கோப்பை'க்கான கால்பந்து போட்டி கோவை நேரு மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில் கோவை மாவட்டத்தில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. ஒரு நாளைக்கு 4 போட்டிகள் வீதம் நடக்கின்றன. முதல்நாள் போட்டியில் ஆஷ்ரம் எம்.எச்.எஸ்.எஸ். அணி 5-2 என்ற கோல் கணக்கில் லிசியக்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி வெற்றி பெற்றது. சி.எம்.எஸ். எம்.எச்.எஸ்.எஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சபர்பன் பள்ளி அணியை எளிதில் தோற்கடித்தது. எஸ்.பி.ஓ.ஏ. எம்.எச்.எஸ்.எஸ். அணி 2-0 என்ற கோல் கணக்கில் சி.ஐ.ஆர்.எஸ். அணியை வீழ்த்தியது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :

Newsletter