சிம்ஹாவின் சிறப்பான பந்துவீச்சால் ஒருங்கிணைந்த மாவட்ட அணி முன்னிலை

கோவை : 14 வயதுக்குட்பட்ட ஒருங்கிணைந்த மாவட்ட கிரிக்கெட் தொடரில் சிறப்பான பந்து வீச்சினால் ஒருங்கிணைந்த மாவட்ட அணி 139 ரன்கள் முன்னிலை பெற்றது.

கோவை : 14 வயதுக்குட்பட்ட ஒருங்கிணைந்த மாவட்ட கிரிக்கெட் தொடரில் சிறப்பான பந்து வீச்சினால் ஒருங்கிணைந்த மாவட்ட அணி 139 ரன்கள் முன்னிலை பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய போட்டியில் ஒருங்கிணைந்த மாவட்ட அணியும், சிட்டி அணியும் பலப்பரீட்சை மோதின. முதலில் பேட் செய்த ஒருங்கிணைந்த மாவட்ட அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹரி கே பாண்டியா (66), குஷ் பர்தியா (72) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

இதைத் தொடர்ந்து. நேற்று இறுதி நாளில் பேட்டிங் செய்த சிட்டி அணியின் வீரர்களும் அபாரமாக ஆடினர். இருப்பினும், ஒருங்கிணைந்த மாவட்ட அணியின் ஜெய் சிம்ஹா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது. இதன்மூலம், ஒருங்கிணைந்த மாவட்ட அணி 139 ரன்கள் முன்னிலை பெற்றது. 







Newsletter