ஹரி மற்றும் பர்தியாவின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான நிலையில் ஒருங்கிணைந்த மாவட்ட அணி

கோவை : 14 வயதுக்குட்பட்ட ஒருங்கிணைந்த மாவட்ட கிரிக்கெட் தொடரில் ஹரி மற்றும் பர்தியாவின் சிறப்பான ஆட்டத்தால் ஒருங்கிணைந்த மாவட்ட அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் உள்ளது.

கோவை : 14 வயதுக்குட்பட்ட ஒருங்கிணைந்த மாவட்ட கிரிக்கெட் தொடரில் ஹரி மற்றும் பர்தியாவின் சிறப்பான ஆட்டத்தால் ஒருங்கிணைந்த மாவட்ட அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் உள்ளது. 

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், ஒருங்கிணைந்த மாவட்ட அணியும், சிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த ஒருங்கிணைந்த மாவட்ட அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹரி கே பாண்டியா (66), குஷ் பர்தியா (61 நாட்அவுட்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல்நாள் முடிவில் அந்த அணி, 90 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் சேர்த்தது. சிட்டி அணி சார்பில் துருவ் பிரபாகிருஷ்ணன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் 14 வயதுக்குட்பட்ட தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter