தேசிய ஜுனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல்

கோவை : கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய ஜுனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் 9 பதக்கங்களை குவித்து அசத்தினர்.

கோவை : கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய ஜுனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் 9 பதக்கங்களை குவித்து அசத்தினர்.



தேசிய அமெச்சூர் மெதாய் அசோசியேசன் சார்பில் 20-வது தேசிய அமெச்சூர் மெதாய் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரூவில் நடைபெற்றது. இதில், கடந்த 12-ம் தொடங்கிய இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 200 பேர் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட சப்-ஜுனியர் மற்றும் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக ஜுனியர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட கோவையைச் சேர்ந்த 9 வீரர்கள் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றனர். 



பதக்கம் வென்ற கோவை வீரர்களின் விபரம் :

ஜுனியர் போட்டி : மாணவிகள் பிரிவில் ஆஷியா, ஹம்னா ஃபிர்னஸ் ஆகியோர் வெள்ளியும், மாணவர்கள் பிரிவில் இளைய பாரதி தங்கம் (34 கி)

சப் ஜுனியர் போட்டி : நிஹால் ராஹித் (தங்கம்), நஃபில் ஷாகித் மற்றும் ஜயிம் ஆஷிக் மற்றும் தனீஃப் ஆகியோர் வெள்ளியும், டேனிஷ் ஜிப்ரான் மற்றும் ஷிகாத் ஆகியோர் வெண்கலம் வென்றனர். 

Newsletter