ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டி : யுனைடேட் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரிகள் அணிகள் சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் யுனைடேட் கூடைப்பந்து கிளப் அணியும், பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரிகள் அணியும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.

கோவை : கோவையில் நடைபெற்ற ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் யுனைடேட் கூடைப்பந்து கிளப் அணியும், பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரிகள் அணியும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின. 

யங் மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை மாநகரில் இருந்து 80-க்கும் மேற்பட்ட அணிகள் கலநது கொண்டன. மினி பாய்ஸ், ஜுனியர் பாய்ஸ், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஜுன் 29-ம் தொடங்கிய இந்தத் தொடர், பல்வேறு சுற்றுகளின் முடிவுக்குப் பின்னர் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. மினி பாய்ஸ் பிரிவில் யங் பிளட் கூடைப்பந்து அணியும், ஜுனியர் பாய்ஸ் பிரிவில் ஆர்.கே.எஸ். அணியும் கோப்பையை வென்றன. 



இதேபோல, சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் யுனைடேட் கூடைப்பந்து கிளப் அணி 94-88 என்ற புள்ளிகள் கணக்கில் ஒய்.எம்.சி.ஏ. அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி 75-59 என்ற புள்ளிகள் கணக்கில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை தோற்கடித்து மகுடம் சூடியது. வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் அணிக்கு தலா ரூ. 10,000மும், மினி பாய்ஸ் மற்றும் ஜுனியர் பாய்ஸ் பிரிவில் தலா ரூ. 8,000மும், பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter