இன்டர் மீடியா கிரிக்கெட் போட்டி : மீடியா லெவன், தினமலர் அணிகள் வெற்றி

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற லீக் போட்டிகளில் மீடியா லெவன், தினமலர் அணிகள் வெற்றி பெற்றன.

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற லீக் போட்டிகளில் மீடியா லெவன், தினமலர் அணிகள் வெற்றி பெற்றன. 



ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் இந்தத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் தினமலர் அணி தனது 3-வது லீக் போட்டியில் டைம்ஸ் ஆப் இந்தியா அணியை எதிர்கொண்டது. இதில், முதலில் பேட் செய்த தினமலர் அணி, பிரபு மற்றும் ஹிட்லரின் அபாரமான ஆட்டத்தால் 172 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டைம்ஸ் ஆப் இந்தியா அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், தினமலர் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. 



இதேபோல, மற்றொரு போட்டியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் மீடியா லெவன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த மீடியா லெவன் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து, விளையாடிய இந்தியன் எக்ஸ்பிரஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், சுப்ரமணியின் மிதவேகப் பந்தில் அந்த அணியின் வீரர்கள் தடுமாறினர். இதனால், ஒரு ரன் வித்தியாசத்தில் மீடியா லெவன் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Newsletter