பி.எஸ்.ஜி. கூடைப்பந்து போட்டி : சென்னை சுங்கவரி அணி சாம்பியன்

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை சுங்கவரி அணி சாம்பியன் பட்டடத்தை வென்றது.

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை சுங்கவரி அணி சாம்பியன் பட்டடத்தை வென்றது. 



மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டி நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிளப் அணிகள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டியில் எதிர்கொண்ட 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற சென்னை சுங்கவரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, 2 வெற்றிகளைப் பெற்ற தமிழக காவல்துறை அணி 2-வது இடத்தைப் பிடித்தது. 



சென்னையின் அரீஸ் ஸ்டீல் மற்றும் திண்டுக்கல் கூடைப்பந்து கிளப் அணி 3-வது இடத்தை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) கே. பிரகாசன் பரிசுகளை வழங்கினார். 

Newsletter