மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி : அரீஸ் ஸ்டீல்ஸ், ஒய்.எம்.சி.ஏ., அணிகள் வெற்றி

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் அரீஸ் ஸ்டீல்ஸ் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., அணிகள் வெற்றி பெற்றன.

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் அரீஸ் ஸ்டீல்ஸ் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., அணிகள் வெற்றி பெற்றன.



மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டி நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிளப் அணிகள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. அதில், சென்னையைச் சேர்ந்த அரீஸ் ஸ்டீல்ஸ் அணி 86-31 என்ற புள்ளிகள் கணக்கில் கோவையின் ஸ்பார்ட்டன்ஸ் கூடைப்பந்து கிளப் அணியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 



இதேபோல, மற்றொரு நாக் அவுட் போட்டியில் கோவையின் ஒய்.எம்.சி.ஏ. அணி 70-52 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெயபாரதி கூடைப்பந்து கிளப் அணியை 18 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மேலும், சுங்க வரித்துறை அணி 90-68 என்ற கணக்கில் சென்னையின் சத்தியாபாமா அணியை வீழ்த்தியது. 

Newsletter