4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி : கோவையில் இருந்து களமிறங்கும் 21 வீரர்கள்

கோவை : 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு அணிகளில் கோவையைச் சேர்ந்த 21 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


கோவை : 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு அணிகளில் கோவையைச் சேர்ந்த 21 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 



ஜுலை 19-ம் தேதி தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் உள்ள ஆர்.வி. ஓட்டலில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் ஆர்.ஐ. பழனி பேசுகையில், "டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை முக்கிய பங்காற்றுகிறது. இந்த முறை கோவையில் இருந்து 21 வீரர்கள் பங்கேற்கின்றனர். மாவட்டங்களில் உள்ள வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முகமது ஆசிக் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 



இந்த ஆண்டு கோவையில் டி.என்.பி.எல். போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உயர்கோபுர விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் அடுத்த ஆண்டு போட்டிகள் கோவையில் நடத்தப்படும். கோவை மைதானம் முக்கியமானதாக கருதப்படுவதால், இங்கு 50 சதவீத போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். 



முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரரான பிரசன்னா கூறுகையில், "விக்கெட் கீப்பரான என். ஜெகதசீன், இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முத்திரை பதித்துள்ளனர். இதுபோன்ற உள்ளூர் போட்டிகள் தேசிய, சர்வதேச போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்ய எளிதாக உள்ளது," என்றார். 



கோவை வீரர்கள் இடம்பெற்றுள்ள அணிகளின் விபரம் 

துட்டி பேட்ரியட்ஸ் : சுபம் மேக்த்ரா எஸ், ஆர். கார்த்திகேயன்

லைகா கோவை கிங்ஸ் : சுரேஷ் குமார் ஜே, முகமது ஆசிக்

மதுரை பேந்தர்ஸ் : ஜே. கவுசிக், ஆர். மிதுன், டி. வீரமணி

ரூபி திருச்சி வாரியர்ஸ் : கே. சரவணகுமார்

வி.பி. காஞ்சி வீரன் : அவுசிக் ஸ்ரீனிவாஸ், பி. சுகேந்திரன் மற்றும் கவுதம் தாமரை கண்ணன்

திண்டுக்கல் டிராகன்ஸ் : ஹரி நிசாந்த், அபினவ், ஜெகதீசன், சுஜய், பிரனேஷ், அன்பு

ஐடிரீம் காரைக்குடி காளைஸ் : மோகன் பிரசாந்த், சாஜகான், கருப்புசாமி.

Newsletter