பி.எஸ்.ஜி. கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. 



பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டி வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிளப் அணிகள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. 



முதல் நாளில், கோவை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி 47-29 என்ற கணக்கில் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப்பையும், ஜெயபாரதி கூடைப்பந்து கிளப் அணி 65-44 என்ற புள்ளிகள் கணக்கில் உப்பிலி பாளையம் கூடைப்பந்து கிளப் அணியையும் தோற்கடித்தன. 



பி.எஸ்.ஜி. பார்மஸி அணி 64-34 என்ற புள்ளி கணக்கில் சி.பி.பி.இ. அணியை 30 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு போட்டியில் ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 71-45 என்ற புள்ளிகள் கணக்கில் ஃப்ரண்ட்ஸ் கூடைப்பந்து கிளப் அணியை வீழ்த்தியது. 

Newsletter