மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் மகுடம் சூடினார் அர்ஜுன்

கோவை : மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் 21 வயதுக்குட்டோருக்கான பிரிவில் அர்ஜுன் பிரனதோஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

கோவை : மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் 21 வயதுக்குட்டோருக்கான பிரிவில் அர்ஜுன் பிரனதோஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

லிவோ ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் 2 நாட்கள் நடைபெற்ற ரைசிங் ஸ்டார் மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 10 வயதுக்குட்பட்ட மினி கோர்ட் மற்றும் 10, 12, 14, 16 மற்றும் 21 ஆகிய வயதுகளுக்குட்பட்டோருக்கென தனித்தனி பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 10 வயதுக்குட்பட்ட மினி கோர்ட் பிரிவின் இறுதி போட்டியில் முகுந்த் 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இதேபோல, 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஜெய்வந்த் 6-3 என்ற கணக்கில் பவிஷ்னுவை தோற்கடித்து சாம்பியனானார்.

12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ரிதிக் வைஷ்னவும், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பிரணாய் கார்த்திக் மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மாயா ராஜேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 21 வயதுக்குட்டோருக்கான பிரிவில் அர்ஜுன் பிரனதோஷ் 6-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

Newsletter