9-ம் தேதி விளையாட்டு விடுதிக்கு 2-ம் கட்டமாக தேர்வு போட்டிகள்

2019-20-ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதிக்கு 2- ம் கட்டமாக தேர்வு போட்டிகள் 9-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தடகளம் மற்றும் கால்பந்து போட்டியும், இறகுப்பந்து, டேக்வெண்டோ, கையுந்து பந்து, கைப்பந்து மற்றும் ஸ்குவாஷ் பொட்டியும் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது

போட்டியின் விதிமுறைகள் :

* 6,7,8,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு விடுதியில் விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் 2 சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டையினை இணைத்து வழங்கிட வேண்டும். 

* உயரமானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* 7-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2006 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்து இருக்க வேண்டும்.

* 8-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்து இருக்க வேண்டும்.

* 9-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்து இருக்க வேண்டும்.

* 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2001 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்து இருக்க வேண்டும்.

* உணவு , தங்குமிடம், விளையாட்டுச் சீருடை, விளையாட்டுப் பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

* கல்வி சம்பந்தப்பட்ட கட்டணங்களை பெற்றோர் ஏற்க வேண்டும்.

* எந்த காரணத்தாலும் இடையில் வெளியேறினால், நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் கணக்கீட்டு தொகையினை செலுத்த வேண்டும்.

* முதன்மை சிறப்பு விளையாட்டு விடுதி தேர்வுகள் 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு 10, ம் தேதி நடைபெறும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் அனைத்தும் சமர்பிக்க வேண்டும்.

Newsletter