மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி : ஒய்.எம்.சி.ஏ. அரையிறுதிக்கு தகுதி

கோவை : 65-வது ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டியில் ஆர்.எஸ்.சி.அணியை தோற்கடித்து ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கோவை : 65-வது ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டியில் ஆர்.எஸ்.சி.அணியை தோற்கடித்து ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.



மிகவும் பழமை வாய்ந்த மாவட்ட அளவிலான ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டியில் கோவை மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கூடைப்பந்து கிளப் அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியானது மினி பாய்ஸ் மற்றும் ஜுனியர் பாய்ஸ் என இருபாலாருக்கும் நடத்தப்பட்டு வருகிறது. 



இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில், ஆர்.எஸ்.சி.அணியும், ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒய்.எம்.சி.ஏ. அணி (71) ஆர்.எஸ்.சி. அணியை (38) 33 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.



இதேபோல, யுனைடேட் கூடைப்பந்து கிளப் அணி 70-55 என்ற கணக்கில் சதர்ன் வாரியர்ஸை வீழ்த்தியும், 110 பட்டாலியன் அணி 86-83 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஆர்.எல்.எம்.எச்.எஸ். கூடைப்பந்து அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Newsletter