தேசிய அளவிலான டென்னிஸ் தொடர் : இறுதி கட்டத்தில் இரட்டையர் பிரிவு

கோவை : தேசிய அளவிலான தரவரிசை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் கபிர் - விராஜ் மற்றும் சாய் - கவின் ஜோடிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

கோவை : தேசிய அளவிலான தரவரிசை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் கபிர் - விராஜ் மற்றும் சாய் - கவின் ஜோடிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.



கே.ஜி. ரமேஷ் டென்னிஸ் அகாடமி சார்பில் குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்சில் தேசிய அளவிலான தரவரிசை டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் என இரு பிரிவுகளின் கீழ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் இரு பாலாருக்கும் நடத்தப்பட்டு வருகிறது. 



குறிப்பாக, யு16 பிரிவின் இரட்டையர் பிரிவில் சுமார் 32 ஜோடிகள் மோதின. இதில், கபிர் - விராஜ் மற்றும் சாய் - கவின் ஜோடிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. கபீர் - விராஜ் ஜோடி தனது அரையிறுதியில் தீபக் - ஸ்ரவன் இணைய எதிர்த்து விளையாடியது. 



இதில், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வீழ்ந்த கபீர் ஜோடி, 4-6, 7-10 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போல, சாய்-கவின் ஜோடி 4-6, 6-0, 10-4 என்ற செட் கணக்கில் சித்தார்த், அகிலேஷ் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

Newsletter