ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டி : முதல்நாள் ஆட்டநேர முடிவில் மாவட்டம் -I அணி நிதான ஆட்டம்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் மாவட்டம்-I அணி முன்னிலை பெற்றுள்ளது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் மாவட்டம்-I அணி முன்னிலை பெற்றுள்ளது.

மாநில அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் வகையில் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில், சிறப்பாக விளையாடும் வீரர்கள் மாநில அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்டம் -I மற்றும் மாவட்டம் -II அணிகள் பலப்பரிட்சை நடத்தின. 

முதலில் பேட் செய்த மாவட்டம் -I அணி சிவதேவனின் (49) பங்களிப்பினால் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, பேட் செய்த மாவட்டம் -I அணிக்கு கே.சிபயேந்தால் அடித்த அரை சதத்தினால், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

Newsletter