பெண்கள் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி : கோவை தடகள அணி வீராங்கனைகள் 21 பதக்கங்களை வென்று அசத்தல்

கோவை : பெண்கள் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனைகள் 21 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.


கோவை : பெண்கள் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனைகள் 21 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.



பெண்களுக்காக முதல்முறையாக கோவா மாஸ்டர் தடகள கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 700 தடகள வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கோவையைச் சேர்ந்த 30 வீராங்கனைகள் உள்பட தமிழகம் சார்பில் மொத்தம் 111 பேர் பங்கேற்றனர். அதில், 32 தங்கம், 31 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 93 பதக்கங்களை தமிழகம் கைப்பற்றியது. குறிப்பாக, கோவையைச் சேர்ந்த வீராங்கனைகள் 10 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்கள் வென்றனர்.



வசந்தி (2 தங்கம்), கோனேஸ்வரி (1 வெள்ளி, 2 வெண்கலம்), சரிதாதேவி (தங்கம்), கிருஷ்ணவேனி (வெண்கலம்), காயத்ரி (1 தங்கம், வெள்ளி), ஸ்ரீலேகா (ஒரு வெள்ளி, வெண்கலம்), விஜயலட்சுமி (2 தங்கம்), கண்மணி ஷி ராணி (வெள்ளி), ரோஸ்லின் (வெண்கலம்), குகலூர் பழனிசாமி சாந்தி (தங்கம், 2 வெள்ளி), சிவகாமி பாலசுந்தரம் (2 தங்கம்), பாலாமணி (தங்கம்), ஆகியோர் கோவையின் சார்பில் பங்கேற்று பதக்கம் வென்றவர்களாவர்.

Newsletter