தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : தேசிய அளவிலான தரவரிசை டென்னிஸ் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை : தேசிய அளவிலான தரவரிசை டென்னிஸ் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது. 



கே.ஜி. ரமேஷ் டென்னிஸ் அகாடமி சார்பில் குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்சில் நடந்து வரும் இந்தப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 14 வயதுக்குட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் என இரு பிரிவுகளின் கீழ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் இரு பாலாருக்கும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைய முதல்நாள் போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சக்ஷம் ஹேமா அட்ரே 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் கார்த்திகேயா சுப்ரமணியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல, தினேஷ் ரிதிக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கிருத்திக் சிவகுமாரை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தார். 



Newsletter