65-வது ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டி : சதர்ன் வாரியர்ஸ் அணி அபார வெற்றி

கோவை : 65-வது ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டியில் ரெனோவேட்டர்ஸ் அணியை 21 புள்ளிகள் வித்தியாசத்தில் சதர்ன் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.

கோவை : 65-வது ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டியில் ரெனோவேட்டர்ஸ் அணியை 21 புள்ளிகள் வித்தியாசத்தில் சதர்ன் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.



மிகவும் பழமை வாய்ந்த மாவட்ட அளவிலான ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து போட்டியில் கோவை மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கூடைப்பந்து கிளப் அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியானது மினி பாய்ஸ் மற்றும் ஜுனியர் பாய்ஸ் என இருபாலாருக்கும் நடத்தப்பட்டு வருகிறது. 



நேற்று நடைபெற்ற போட்டியில் சதர்ன் வாரியர்ஸ் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 98-77 என்ற புள்ளிகள் கணக்கில் ரெனோவேட்டர்ஸ் அணியை தோற்கடித்தனர். மற்றொரு போட்டியில் 110 பட்டாலியன் அணி 72-63 என்ற கணக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த எஸ்.டி.சி. கல்லூரி அணியை வீழ்த்தியது.



இதேபோல, 71-29 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளி, டெக்சிட்டி கூடைப்பந்து கிளப் அணியை வென்றது. மிராகிள் கூடைப்பந்து கிளப் அணியிடம் 79-74 என்ற கணக்கில் பி.எஸ்.ஜி. சர்வஜனா அணி வீழ்ந்தது. 

Newsletter