காரமடை ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி

கோவை : காரமடை ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வேலுமணியம்மாள் நினைவு பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

கோவை : காரமடை ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வேலுமணியம்மாள் நினைவு பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றது. 

இதில், புஜ்ஜனூர், சின்னத்தடாகம், கண்ணார்பாளையம், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளிகளைச் சேர்ந்த 420-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கபடி, வாலிபால், த்ரோ பால் மற்றும் 5 வீரர்கள் கொண்ட கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அணிகளுக்கு நிர்வாக அறங்காவலர். வி. ராமகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.

Newsletter