மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி : அரையிறுதியில் பி.எஸ்.ஜி. சர்வஜனா உயர்நிலை பள்ளி அணிகள் தகுதி

கோவை : முதல் பி.எஸ்.ஜி., கோப்பை மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் பி.எஸ்.ஜி. சர்வஜனா உயர்நிலை பள்ளியின் இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

கோவை : முதல் பி.எஸ்.ஜி., கோப்பை மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் பி.எஸ்.ஜி. சர்வஜனா உயர்நிலை பள்ளியின் இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.



கடந்த வியாழக்கிழமை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய இந்தப் போட்டியை பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளியின் செயலாளர் பி. நாராயணசாமி தொடங்கி வைத்தார். இதில், மொத்தம் 17 அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி தொடரின் 2-வது நாளில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. சர்வஜனா ஏ அணி, ஒண்டிப்புதூர் உயர்நிலை பள்ளியை எதிர்த்து விளையாடியது. 



அதில், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல், பி.எஸ்.ஜி. சர்வஜனா பி அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ஜி மெட்ரிக்குலேசன் உயர் பள்ளியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.



மேலும், ஶ்ரீ ராகவேந்திரா உயர்நிலைப் பள்ளி மற்றும் டாக்டர் பி.ஜி.வி. மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

Newsletter