மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி : அல்வெரினா மெட்ரிக்குலேசன் பள்ளி சாம்பியன்

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் அல்வெரினா மெட்ரிக்குலேசன் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் அல்வெரினா மெட்ரிக்குலேசன் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. 



8-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி அல்வெரினா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்றது. நேற்று நடந்த 13 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், லீக் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத அல்வெரினா மெட்ரிக்குலேசன் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தூத்துக்குடியைச் சேர்ந்த அல்வெரினா ஹோலி கிராஸ் பள்ளி 2-வது இடத்தையும், சேலம் செயிண்ட் ஜோசப் பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தன. அல்வெரினா பள்ளியைச் சேர்ந்த அனேதா டெய்ஸி இவாங்க்லின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.



இதேபோல, 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சென்னை செயிண்ட் ஜோசப் பள்ளி முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து, போட்டியை நடத்திய அல்வெரினா பள்ளி 2-வது இடத்தையும், திருவண்ணாமலையின் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 3-வது இடத்தைக் கைப்பற்றின. இந்தப் பிரிவில் சிறந்த வீராங்கனையாக சென்னை செயிண்ட் ஜோசப் பள்ளியின் கிருத்திகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.



வெற்று பெற்ற அணிகளுக்கு நேரு கல்வி குழுமத்தின் செயலாளரும், தலைமை நிர்வாக இயக்குநருமான பி. கிருஷ்ணகுமார் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆனந்தலட்சுமி பரிசுகளை வழங்கினர்.

Newsletter