மாநில அளவிலான கராத்தே போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : 2-வது மாநில அளவிலான கராத்தே போட்டி கவுமரம் சுஷிலா இண்டெர்நேசனல் ரெசிடென்சியல் பள்ளியில் இன்று தொடங்கியது.


கோவை : 2-வது மாநில அளவிலான கராத்தே போட்டி கவுமரம் சுஷிலா இண்டெர்நேசனல் ரெசிடென்சியல் பள்ளியில் இன்று தொடங்கியது.



கவுமரம் சுஷிலா இண்டெர்நேசனல் ரெசிடென்சியல் பள்ளி வளாகத்தில் நடக்கும் இந்தப் போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். 



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட ஐ.சி.சி. தரம் மிகுந்த பள்ளிகளை சேர்ந்த 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். 



13 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் என இரு பிரிவுகளின் கீழ் மாணவ, மணவிகளுக்கு என தனித்தனியே நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவர்கள் இந்த ஆண்டு கொல்கத்தாவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 

Newsletter