ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சென்னையின் எஃப்.சி. கால்பந்து அகாடமி தொடக்கம்

கோவை : ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சென்னையில் எஃப்.சி. கால்பந்து அகாடமி நேற்று தொடங்கப்பட்டது.

கோவை : ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சென்னையில் எஃப்.சி. கால்பந்து அகாடமி நேற்று தொடங்கப்பட்டது. 



கல்வியுடன் சேர்ந்து பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சென்னையில் எஃப்.சி. கால்பந்து அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. ரத்தினம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அழகன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 



பின்னர் அவர் பேசுகையில், "மாணவர்கள் வாழ்க்கையில் விளையாட்டு பெரும் பங்காற்றுகிறது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பெற்றோருக்கும் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் பிற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். எலக்ட்டிரானிக் பொருட்களை தவிர்த்து மைதானங்களில் அதிக நேரத்தை ஒதுக்கி, பழைய கலாச்சாரத்தை திருப்பிக் கொண்டு வர முடியும்," என்றார். 

சென்னையின் எஃப்.சி. தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணாதீப் மேனன் பேசுகையில், "நமது மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதே எங்களது கிளப்புகளின் நோக்கமாகும். ஏற்கனவே, சென்னையின் எஃப்.சி. கிளப் 5 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமியில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு சென்னையின் எஃப்.சி. அணியில் இடம் கிடைக்கும். எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்," என்றார். 



6 வயது முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. மேலும் விபரங்களுக்கு, நாகராஜ் : 9566826333, தொலைபேசி : 0422-4040925.

Newsletter