நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி ஆலோரை அணி வெற்றி

நீலகிரி : குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் ஆலோரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நீலகிரி : குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் ஆலோரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.



ஹாக்கி நீல்கிரீஸ், ஜி.பி.எம். வாரியர்ஸ் சங்கங்கள் இணைந்து மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியை ஒரு வாரகாலம் நடத்தின. இதில், முதல் அரையிறுதியில் ஜி.பி.எம். வாரியர்ஸ் அணி, 3-க்கு-1 என்ற கோல் கணக்கில் போட்டி அணியை தோற்கடித்தது. இரண்டாம் அரையிறுதியில், ஆலோரை அணி நெப்ட்யூன் அணியை 3-க்கு-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து, இறுதி போட்டியில் ஜி.பி.ஏம், வாரியர்ஸ் மற்றும் ஆலோரை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால், 3-க்கு-3 என்ற கோல்கணக்கில் சமநிலை பெற்றது. இதனால், பெனால்டி சூட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில், ஆலோரை அணி, 3-க்கு-0 என்ற கோல் கணக்கில் ஜி.பி.எம் வாரியர்ஸ் அணியை வென்றது.



தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவில் 2-ம் இடம் பிடித்த ஜி.பி.எம்., வாரியர்ஸ் அணிக்கு மின்வாரிய கணக்கு அலுவலர் கணேஷ் ராஜா பரிசு வழங்கினார். à®®à¯à®¤à®²à®¿à®Ÿà®®à¯ பிடித்த ஆலோரை அணிக்கு துணை தலைவர் சுரேஷ் குமார் பரிசு வழங்கினார்.

Newsletter