92-வது மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த கோவை இளம் வீராங்கனை

கோவை : 92-வது மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பின் நடை போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை எஸ். பவித்ரா சாதனை படைத்துள்ளார்.

கோவை : 92-வது மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பின் நடை போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை எஸ். பவித்ரா சாதனை படைத்துள்ளார். 

92-வது மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி அண்ணா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 10 கி.மீ. நடை போட்டியில் (ரேஸ் வாக்) கோவையைச் சேர்ந்த இளம் தடகள வீராங்கனை எஸ். பவித்ரா வெறும் 56 நிமிடம் 14 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை வென்றதுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டு கோவை நேரு மைதானத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் சி. மகாலட்சுமி (57.18) வினாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. தற்போது, பவித்ரா அந்த சாதனையை முறியடித்துள்ளார். 



ஜென்னிஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசனின் வைரவநாதனிடம் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்த பவித்ரா, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, ஜுனியர் மாநில அளவிலான போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக கால் பதித்தார். அதே ஆண்டில் மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். பின்னர், சென்னையில் நடந்த யூத் ஸ்டேட் மீட் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். 

"முதலில் நீண்ட தூரம் ஓட்டப்பந்தய வீரராக எனது வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால், எனது பயிற்சியாளர் ரேஸ் வாக்கில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். அது எனது வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது. முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றேன். வெறும் 15 நாட்கள் பயிற்சி பெற்றதிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றேன். இதனால், தொடர்ந்து, பயிற்சி பெற்றால் மேலும் சாதிக்கலாம் என முடிவு செய்து கடினமாக உழைத்தேன்," என்றார் பவித்ரா. 

இதேபோல, ஜென்னிஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசனின் சதீஷ்குமார் 5 கி.மீ. நடை போட்டியில் தங்கமும், 3 கி.மீ. நடை போட்டியில் விக்டர் சாமுவேல் தங்கமும் வென்றனர். 

Newsletter