தேசிய அளவிலான கார் பந்தயம் : ஐ.டி.சி. பிரிவில் சென்னை வீரர் முதலிடம்

கோவை : கோவை கரிமோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தின் ஐ.டி.சி.யின் பிரிவின் 2-வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் தரணி முதலிடம் பிடித்துள்ளார்.

கோவை : கோவை கரிமோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தின் ஐ.டி.சி.யின் பிரிவின் 2-வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் தரணி முதலிடம் பிடித்துள்ளார். 



கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப். எம்.எம்.எஸ்.சி. தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியின் 2-வது சுற்று நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், ஐ.டி.சி. பிரிவில் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் தரணி முதலிடம் பிடித்தார். இவரைத் தொடர்ந்து, சக அணியின் வீரர் துருவ் ஷிவாஜி மோகித் 2-வது இடத்தையும், ஈஷான் தோதிவாலா 3-வது இடத்தையும் பிடித்தனர். இதில், 77 வயது வீரர் டி வித்யபிரகாஷ் 4-வது இடத்தை பிடித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 



இதேபோல, வோக்ஸ்வோகன் ஏமியோ கிளாஸ் பிரிவில், வங்கதேசத்தின் அவிக் அன்வர் முதலிடத்தையும், சக சாட்டைச் சேர்ந்த ஐமான் சதாத் 2-எது இடத்தையும், டெல்லியைச் சேர்ந்த அன்மோல் சிங் சாஹில் 3-வது இடத்தையும் பிடித்தனர். ஜுனியர் பிரிவில் ஆர்.பி. ராஜராஜன் (பர்ஃபாமன்ஸ் ரேசிங்), ஆர். ராஜசேகர் (ரேஸ் கான்செப்ட்ஸ்), பிரதீக் பென்யா (ரேஸ் கான்செப்ட்ஸ்) ஆகியோர் முன்னிலை பெற்றனர். 

Newsletter