மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி : ராஜலட்சுமி கூடைப்பந்து கிளப் அணி சாம்பியன்

கோவை : மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜலட்சுமி கூடைப்பந்து கிளப் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை : மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜலட்சுமி கூடைப்பந்து கிளப் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 



கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் மைதானத்தில் 2-வது 'ஆல் இந்தியா ஆல் ஸ்டார்' நவக்கொடி நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஜுனியர் கூடைப்பந்து போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கிளப்புகளைச் சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன. சிறுவர்களுக்கு சப்-ஜுனியர் (யு13), ஜுனியர் (யு16), சிறுமிகளுக்கு சப் ஜுனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், லீக் சுற்றுகளின் முடிவில் ஜுனியர் பாய்ஸ் பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்று ராஜலட்சுமி கூடைப்பந்து கிளப் அணி முதலிடத்தைப் பிடித்தது. ஆர்.கே.எஸ். உயர்நிலைப் பள்ளி, பி.எஸ்.ஜி. சர்வஜனா மற்றும் பாரதி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. 



இதேபோல, சப்-ஜுனியர் பெண்கள் பிரிவில் ஒரு தோல்வியையும் சந்திக்காத சி.சி.எம்.ஏ. அணி கோப்பையை வென்றது. இதேபோல, சப்- ஜுனியர் பாய்ஸ் பிரிவில் யங் பிளட் கூடைப்பந்து கிளப் முதலிடத்தையும், ஆர்.கே.எஸ். 2-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.எஸ்.ஜி. கல்லூரியின் பேராசிரியர் பழனிசாமி பரிசுகளை வழங்கினார். 

Newsletter