தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி

கோவை : தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

கோவை : தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். 

கோவையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியானது, ஜுனியர் வீரர்கள், வீராங்கனைகள் என ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பெண்கள் பிரிவில் தமிழகத்தின் குந்தன ஸ்ரீ பன்டாரு 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மகாராஷ்டிராவின் சாய் போயாரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். 



இதேபோல, மற்றொரு தமிழக வீராங்கனை லட்சுமி பிரபா 7-6, 7-5 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா வீராங்கனை ஈஸ்தா ஜாதவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மேலும், தமிழக வீராங்கனை கார்த்திகா விஜயை தோற்கடித்த ரேஷ்மா மரூரியும், சைரில் ஜோயலை தோற்கடித்து கர்நாடகாவைச் சேர்ந்த சுகுதா மரூரியும் அரையிறுதிக்குள் நுழைந்தனர். 

ஆண்கள் பிரிவில், கர்நாடாகவின் ஆயுஷ் பட், மகாராஷ்டிராவின் சாஹேப் சோதி மற்றும் கரின் கான், கர்நாடகாவின் நிதிலன் எரிக் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Newsletter