மாவட்ட அளவிலான ஜுனியர் கூடைப்பந்து போட்டி கோவையில் இன்று தொடக்கம்

கோவை : 2-வது 'ஆல் இந்தியா ஆல் ஸ்டார்' நவக்கொடி நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஜுனியர் கூடைப்பந்து போட்டி கோவையில் இன்று தொடங்கியது.

கோவை : 2-வது 'ஆல் இந்தியா ஆல் ஸ்டார்' நவக்கொடி நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஜுனியர் கூடைப்பந்து போட்டி கோவையில் இன்று தொடங்கியது.



கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் மைதானத்தில் இன்று முதல் நடைபெறும் இந்தப் போட்டியில், மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கிளப்புகளைச் சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டுள்ளன. சிறுவர்களுக்கு சப்-ஜுனியர் (யு13), ஜுனியர் (யு16), சிறுமிகளுக்கு சப் ஜுனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 



முதல் நாளில் 8 போட்டிகள் நடைபெற்றன. ஜுனியர் பிரிவில் மல்லையன் அணி 62-16 என்ற கணக்கில் ராஜலட்சுமி அணியை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் டெக்ஸிட்டி கூடைப்பந்து கிளப் அணி 52-35 என்ற கணக்கில் அனன்யா வித்யாலயாவை வீழ்த்தியது. பாரதி எம்.எச்.எஸ்.எஸ். அணி யங் பிளட் கூடைப்பந்து கிளப் அணியை 47-20 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து, முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

இதேபோல, சப்-ஜுனியர் பிரிவில், கத்ரி மில்ஸ் அணி 41-37 என்ற புள்ளி கணக்கில் சுகுணா பி.ஐ.பி. அணி வெற்றி பெற்றது. மற்றொருபுறம், ஒய்.எம்.சி.ஏ. அணி 47-7 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எளிதில் தோற்கடித்தது. மேலும், கே.கே. நாயுடு பள்ளி 20-09 என்ற புள்ளி கணக்கில் டெக்ஸிட்டியை வீழ்த்தியது. 

Newsletter