யு14 மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : அரையிறுதிக்கு முன்னேறியது கோவை அணி

கோவை : 14 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி அணியை எளிதில் தோற்கடித்து கோவை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

கோவை : 14 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி அணியை எளிதில் தோற்கடித்து கோவை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

ஏற்கனவே, இரு வெற்றிகளைப் பெற்ற கோவை அணி, பி.எஸ்.ஜி. மருத்துவமனை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கிருஷ்ணகிரி அணியை எதிர்த்து விளையாடியது. இதில், முதல்நாளில் 170 ரன்களுக்கு கிருஷ்ணகிரி அணி ஆட்டமிழந்தது. பின்னர், களமிறங்கிய கோவை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 39 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து அந்த அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், முதல் இன்னிங்சில் 63 ரன்கள் முன்னிலை பெற்ற கோவை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

Newsletter