முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டி : தினேஷின் அபார ஆட்டத்தால் ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடந்து வரும் முதல் டிவிசன் லீக் போட்டியில் தினேஷின் அபார பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காஸ்மோ வில்லேஜ் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்கு தினேஷ் குமார் (42 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 50 ஓவர்கள் முடிவில், 228 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து, பந்து வீச்சிலும் தினேஷ் (5 விக்கெட்) அசத்தினார். இதன் காரணமாக, 40 ஓவர்கள் முடிவில் 160 ரன்களுக்கு காஸ்மோ வில்லேஜ் கிரிக்கெட் அணி சுருண்டது. இதன்மூலம், 68 ரன்கள் வித்தியாசத்தில் ஜாலி ரோவர்ஸ் அணி வென்றது. 

ஸ்ரீ சக்தி கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் அணியை எளிதில் தோற்கடித்தது. 

Newsletter