முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டி : 8 விக்., வித்தியாசத்தில் கோவை நைட்ஸ் அணி வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை நைட்ஸ் அணி வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை நைட்ஸ் அணி வெற்றி பெற்றது. 



பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 25.4 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. பின்னர், இலக்கை நோக்கி ஆடிய கோவை நைட்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, டி. வீரமணி ஆட்டமிழக்காமல் 65 ரன்களும், ஆர். ஸ்ரீ. நிரஞ்சன் 31 ரன்களும் எடுத்தனர். 



இதேபோல, 3-வது டிவிசனின் மற்றொரு போட்டியில் அஸ்வினின் (5 விக்.,) அபார பந்து வீச்சால் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் எம்.சி.சி. அணி 36 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த கோவை டஸ்கர் அணி 184 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 56 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்டேன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

Newsletter