ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பிலான பிரஸ் & மீடியா டி20 கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் உடற்கல்வித் துறை சார்பில் பிரஸ் & மீடியா டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் உடற்கல்வித் துறை சார்பில் பிரஸ் & மீடியா டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. 

ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் உடற் கல்வித் துறை சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா ட்ரோபி-19 'பிரஸ் & மீடியா டி20' கிரிக்கெட் போட்டி குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில், தினமலர், தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் கிரோனிக்ல் மற்றும் மீடியா லெவன் ஆகிய ஏழு அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றன.



இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தினமலர் அணி மீடியா லெவன் அணியினை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் டாஸ் வென்ற மீடியா லெவன் அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டினை இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், விளையாடிய தினமலர் அணி 14.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியினை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி.பேபி ஷகிலா தொடங்கி வைத்தார். ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உடற் கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் குமரேசன் ஆகியோர் இப்போட்டியினை ஒருங்கிணைத்து நடத்தினர். 

Newsletter