டி.என்.பி.எல். சீசன் 4 கிரிக்கெட் போட்டிக்கான மைதானங்கள் அறிவிப்பு : கோவை ரசிகர்கள் ஏமாற்றம்

கோவை : டி.என்.பி.எல். சீசன் 4 கிரிக்கெட் போட்டிகள் கோவையில் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது கோவை மாவட்ட ரசிகர்களை பெரும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.


கோவை : டி.என்.பி.எல். சீசன் 4 கிரிக்கெட் போட்டிகள் கோவையில் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது  கோவை மாவட்ட ரசிகர்களை பெரும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானம் சர்வதேச தரத்தை போன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஃப்ளூட் லைட், மீடியா பாக்ஸ், கேலரி உள்ளிட்ட பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இந்த சூழலில், 4-வது சீசனுக்கான தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் விவரங்கள் மற்றும் வீரர்கள், அணிகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய மாநில கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானம் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவையிலும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் முடிவடையாததால், இந்த ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



டி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு மாவட்ட அணியிலும் தலா 2 யு19 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறையினால், கிராமப்புற விளையாட்டு வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பெறுகின்றனர்.



“கோவை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம்  வேண்டும் என்பது கோவை மாவட்ட ரசிகர்களின் கனவாகும். மேலும், மைதானம் அமைந்தால் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு மைதானம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் கோவை விடுபட்டுள்ளது. இதனால், கோவை ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர், என்கிறார் விளையாட்டு ஆர்வலர்.



இது தொடர்பாக கோவை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கவுதமிடம் கேட்டபோது, மைதானத்திற்க்கான அனைத்து பணிகளும் ஏறத்தாழ நிறைவடைந்து விட்டது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தயாராகிவிடும். பிறகு, போர்டு போட்டிகள் நடத்தப்பச இருக்கிறது, என்றார்.

Newsletter