மாநில அளவிலான கபடி போட்டி : கற்பகம் கல்லூரி சாம்பியன்

கோவை : மாநில அளவிலான கபடி போட்டியில் கற்பகம் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : மாநில அளவிலான கபடி போட்டியில் கற்பகம் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தங்கவேலு நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி சத்தியமங்கலத்தில் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 96 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியில் கற்பகம் கல்லூரி - கோபியைச் சேர்ந்த கே.எம். கபடி கிளப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், 25-18 என்ற புள்ளிகள் அடிப்படையில் கற்பகம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

Newsletter