தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் : டி.வி.எஸ் நிறுவனத்தின் அகமது மற்றும் ஜெகன் முன்னிலை

கோவை : இந்திய தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றில் டி.வி.எஸ். நிறுவனத்தின் அகமது மற்றும் ஜெகன் முன்னிலை பெற்றனர்.

கோவை : இந்திய தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றில் டி.வி.எஸ். நிறுவனத்தின் அகமது மற்றும் ஜெகன் முன்னிலை பெற்றனர். 

கோவை கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப். எம்.எம்.எஸ்.சி. தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 301-400 சி.சி. பிரிவு போட்டியில், பைக்கின் என்ஜின் பழுதானதால், டி.வி.எஸ். நிறுவனத்தின் ஜெகன் 4-வது இடத்தையே பிடித்தார். ஆனால், அவர் 165 சி.சி. பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார். இதேபோல, 301-400 சி.சி. பிரிவில் சக நிறுவன வீரர்களான அகமது முதலிடத்தையும், தீபக் ரவி குமார் 2-வது இடத்தையும் பிடித்தனர். கஸ்டோ ரேசிங் நிறுவனத்தின் சத்ய நாராயணன் ராஜு 3-வது இடத்தை பிடித்தார். 



"இறுதியில், இந்த வாரம் வெற்றி பெற்றது மிகவும் நிம்மதியாக உள்ளது. நான் நினைத்ததை போல இல்லாததால், சிறப்பான செயல்பட வேண்டும் என தீர்மானித்தேன். முதலில் முன்னிலைப் பெற்றிருந்தேன். பின்னர், முடிவிலும் முன்னிலையும் முடித்தேன்," என்றார் ஜெகன்.

இதேபோல, மகளிர் பிரிவில் ஸ்பார்க்ஸ் ரேசிங்கின் அன் ஜெனிஃபர் முதலிடத்தையும், சக நிறுவன வீராங்கனை ரியானா பீ 2-வது இடத்தையும், பி.வி.டி. நிறுவனத்தைச் சேர்ந்த நிவேதா ஜெசிகா 3-வது இடத்தையும் பிடித்தனர். 



Newsletter