4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி சாம்பியன்

கோவை : 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் கோவை ஃப்ரண்ட்ஸ் சி.சி. அணியை 193 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை : 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் கோவை ஃப்ரண்ட்ஸ் சி.சி. அணியை 193 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

தமிழக கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமியும், கோவை ஃப்ரண்ட்ஸ் சி.சி. அணியும் பலப்பரீட்சை நடத்தின. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியின் சி. மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, அபிலேஷ் 151 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து, கடினமான இலக்கை நோக்கி ஆடிய கோவை ஃப்ரண்ட்ஸ் சி.சி. அணி வெறும் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இ.ஏ.பி. அணி சார்பில் ரோகித் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதேபோல, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடந்த 3-வது டிவிசன் போட்டியில் 35.5 ஓவர்களுக்கு 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலக்கை நோக்கி ஆடிய என்.ஐ.ஏ. கல்வி நிறுவனம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Newsletter