சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் அசத்தவிருக்கும் கோவை வீராங்கனை

கோவை : ஸ்பெயினில் நடைபெற இருக்கும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை பங்கேற்க இருக்கிறார்.

கோவை : ஸ்பெயினில் நடைபெற இருக்கும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை பங்கேற்க இருக்கிறார். 



ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் ('வேர்ல்டு ரோலர் கேம்ஸ் 2019') சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி இந்த மாதம் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், ரோலர் டெர்பி பிரிவில் கோவையைச் சேர்ந்த அபினயா என்ற மாணவி கலந்து கொள்கிறார். இவர் நேஷனல் மாடல் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அபினயா 5-ம் வகுப்பு படிக்கையில், அவரது பள்ளியில் நடந்த ஸ்கேட்டிங் பயிற்சியைக் கண்டு, அதில் ஆர்வம் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு, மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று குவித்தார். இவரது போட்டித் திறமைகளைக் கண்டு அசந்து போன தேர்வாளர்கள், இந்தியா சார்பில் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்தனர். 



"நான் கடந்த 6 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று வருகிறேன். மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தலா 6 பதக்கங்களை வென்றுள்ளேன். தற்போது, நான் சர்வதேச அளவிலான போட்டிக்கு தயாராகி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கங்களை வென்று தருவதே எனது இலட்சியமாகும்," என்றார். 

Newsletter