தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் கோவை மாணவிகள் பங்கேற்பு

கோவை : டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் கோவையைச் சேர்ந்த இரு மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

கோவை : டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் கோவையைச் சேர்ந்த இரு மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 

டெல்லியில் தல்கோத்ரா உள்விளையாட்டரங்கில் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி வரும் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் சார்பில் பங்கேற்க கோவையைச் சேர்ந்த எஸ்.பி. காவியா ஸ்ரீ, கே. சஸ்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி. காவியா ஸ்ரீ, சுகுணா பி.ஐ.பி. பள்ளியில் 7-ம் வகுப்பும், கே. சஸ்திகா தி ஃபர்ஸ்ட் ஸ்கூலில் 5-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இவர்கள் இருவரும் முத்துசரவணன் மற்றும் தங்கராஜ் ஆகியோரிடம் ஓராண்டுக்கும் மேலாக பயிற்சி பெற்று வருகின்றனர். அதோடு, தேசிய அளவிலான போட்டிகளில் 2-ம் இடத்தை பிடித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், அவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் 11 வயதுக்குட்பட்டோருக்கான 35 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்களின் தனிப்பிரிவில் எஸ்.பி. காவியா ஸ்ரீயும், 10 வயதுக்குட்பட்டோருக்கான 30 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்களின் தனிப்பிரிவில் பங்கேற்க இருக்கின்றனர். இதில், வெற்றி பெறுபவர்கள் இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஆசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

Newsletter