யு19 மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : காஞ்சிபுரம் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி

கோவை :19 வயதுக்குப்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தேனி அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சிபுரம் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

கோவை :19 வயதுக்குப்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தேனி அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சிபுரம் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. 

ஏற்கனவே, கோவை, வேலூர் அணிகளை எளிதில் வீழ்த்திய காஞ்சிபுரம் அணி பி.எஸ்.ஜி. மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் தேனியை எதிர்கொண்டு விளையாடியது. இதில், முதலில் பேட் செய்த தேனி அணிக்கு, காஞ்சிபுரம் அணியின் பந்துவீச்சாளர்கள் உஸ்மான் கான், ஷியாம் கணேஷ் ஆகியோர் கடும் சவாலாக திகழ்ந்தனர். இதனால், அந்த 18-வது ஓவரில் 43 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. உஸ்மான் கான் 6 விக்கெட்டுகளும், ஷியாம் கணேஷ் 4 விக்கெட்டுக்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, எளிய இலக்குடன் களமிறங்கிய காஞ்சிபுரம் அணி, 6-வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்த 3-வது வெற்றியை காஞ்சிபுரம் அணி பதிவு செய்தது. 

இதேபோல, மற்றொரு போட்டியில் வேலூர் அணியை (108) 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து (3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள்) தனது 2-வது வெற்றியை கோவை அணி பதிவு செய்தது.

Newsletter