தேசிய அளவிலான ஃபார்முலா கார் பந்தயத்திற்கான அஹுரா அணியின் வீராங்கனைகள் தேர்வு

கோவை : தேசிய அளவில் நடைபெறும் ஜே.கே. டயர் - எஃப்.எம்.எஸ்.சி.ஐ கார் பந்தயப் போட்டியில் பங்கேற்க இருக்கும் அஹுரா அணிக்கான 6 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை : தேசிய அளவில் நடைபெறும் ஜே.கே. டயர் - எஃப்.எம்.எஸ்.சி.ஐ கார் பந்தயப் போட்டியில் பங்கேற்க இருக்கும் அஹுரா அணிக்கான 6 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். 

அஹுரா அணிக்கான வீராங்கனைகளின் தேர்வு நாடு முழுவதும் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில், கூர்கான் (வடக்கு), மும்பை (மத்திய பகுதி) மற்றும் பெங்களூரூ (தெற்கு) ஆகிய பகுதிகளில் நடந்த தேர்வில் ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும், வயது வித்தியாசமின்றி 75-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதில் முதல் 20 இடங்களை பிடித்த வீராங்கனைகள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு, இறுதிகட்ட தேர்வு நடைபெற்றது. அதில், மும்பையைச் சேர்ந்த நடாஷா பூரி, ஓஜஸ்வி மேக்தா, டெல்லியைச் சேர்ந்த ஷிவானி கவுரவ், அமன் ஜுபால், பெங்களூரைச் சேர்ந்த பிரகதி மற்றும் டேராடூனைச் சேர்ந்த அனுஸ்ரீயி குலாதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

Newsletter