யு19 மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி : தேனி அணியை தோற்கடித்தது கோவை அணி

கோவை : 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தேனி அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.

கோவை : 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தேனி அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது. 



நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் காஞ்சிபுரம் அணியிடம் தோல்வியை தழுவிய கோவை அணி, தனது 2-வது போட்டியில் தேனியை எதிர்த்து ஆடியது. à®ªà®¿.எஸ்.ஜி. மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில்பேட் செய்த கோவை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்., இழப்பிற்கு 241 எடுத்தது. அதிகபட்சமாக, ஹரிசங்கர் 65 ரன்களும், திகிஷ் 44 ரன்களும், ஆர். சந்தோஷ் 33 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய தேனி அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 



இதனால், அந்த 36.4 ஓவர்களில் வெறும் 50 ரன்களுக்கு சுருண்டது. கோவை அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுக்களும், கே. பாலாதரன், திகிஷ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.



இதேபோல, மற்றொரு போட்டியில் வேலூர் அணியை (89) 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து (விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள்) தனது 2-வது வெற்றியை காஞ்சிபுரம் அணி பதிவு செய்தது. 

Newsletter