மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 17 பதக்கங்களை வென்ற கோவை மாணவர்கள்

திருப்பூர் : திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையைச் சேர்ந்த சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பின் மாணவ, மாணவிகள் 7 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்று அசத்தினர்.

திருப்பூர் : திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையைச் சேர்ந்த சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பின் மாணவ, மாணவிகள் 7 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்று அசத்தினர். 



ஐக்கிய விளையாட்டு சிலம்பம் சம்மேளனம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி திருப்பூரில் நடைபெற்றது. சப்-ஜுனியர், ஜுனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, விழுப்புரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கோவையின் சார்பில் சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பைச் சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டினர். அதில், 7 தங்கம் உள்பட 4 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றது. தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் தாமு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். 



சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பு சார்பில் ரவி வர்மா (2 தங்கம், 1 வெண்கலம்), லட்சுமி பிரியதர்ஷிணி (2 தங்கம், 1 வெண்கலம்), முகிலன் (வெண்கலம்), நேஹா சிவகுமார் (தங்கம், வெள்ளி), சங்சய் சிவகுமார் (2 வெண்கலம்), லிஷாந்த் ஸ்ரீராம் (2 தங்கம், வெள்ளி), லட்சுமி பிரேம்குமார் (2 வெள்ளி, வெண்கலம்).

Newsletter