யு19 கிரிக்கெட் தொடர் : முதல் போட்டியில் கோவை அணியைத் தோற்கடித்தது காஞ்சிபுரம்

கோவை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கோவை மாவட்ட அணியை காஞ்சிபுரம் வீழ்த்தியது.

கோவை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கோவை மாவட்ட அணியை காஞ்சிபுரம் வீழ்த்தியது. 



பி.எஸ்.ஜி. மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த காஞ்சிபுரம் அணி 49 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக, பிரனவ் குமார் 35 ரன்களும், ஆர். யாஷ் 31 ரன்களும் எடுத்தனர். 



எளிதான இலக்கை நோக்கி ஆடிய கோவை அணிக்கு சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை சரிந்தன. இதனால், 48.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு கோவை அணி சுருண்டது. காஞ்சிபுரம் அணியின் பந்து வீச்சாளர் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 



பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் சி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் வேலூர் அணி (302/9) 215 ரன்கள் வித்தியாசத்தில் தேனி அணியை தோற்கடித்தது. 

Newsletter