ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட்டி : சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது கோவை நைட்ஸ் அணி

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை தோற்கடித்து கோவை நைட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை தோற்கடித்து கோவை நைட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

பி.எஸ்.ஜி.மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கோவை நைட்ஸ் அணி, ஷாஜகானின் (39) அபார ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி விளையாடியது. கோவை நைட்ஸ் அணியினர் சிறப்பாக பந்து வீசி, எதிரணியினரை ரன்களை குவிக்க தடுத்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை மட்டுமே எடுத்ததால், போட்டி சமநிலை அடைந்தது. இதனால், போட்டி சூப்பர் ஓவர் முறைக்குச் சென்றது. 



சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி ஒரு ஓவருக்கு 10 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை நோக்கி ஆடிய கோவை நைக்ஸ் அணியினர் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 



இதேபோல, 3-வது இடத்திற்கான போட்டியில், காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட் அகாடமி (136/9) அணியை இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி (138/3) வெற்றி பெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த பேட்ஸ்மெனாக ஹரி நிஷாந்த் (ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி), சிறந்த பந்துவீச்சாளராக கே. கண்காரியா (ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி) தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல, ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் இ.மனோகரன் சிறந்த விக்கெட் கீப்பராகவும், இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமியின் ஏ.வி. அபிலேஷ் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி.லட்சுமிநாராயணசாமி வழங்கினார். 

Newsletter