54-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை கூடைப்பந்து : இந்தியன் வங்கி அணி சாம்பியன்

கோவை : 54-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை கூடைப்பந்து போட்டியில் ஹரிராமின் அபாரமான ஆட்டத்தால் இந்தியன் வங்கி அணி கோப்பையை வென்றது.


கோவை : 54-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை கூடைப்பந்து போட்டியில் ஹரிராமின் அபாரமான ஆட்டத்தால் இந்தியன் வங்கி அணி கோப்பையை வென்றது.

கோவை மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியன் வங்கி அணி மற்றும் வருமான வரித்துறை அணியும் பலப்ப்ரீட்சை நடத்தின. இரு அணி வீரர்களும் சம்பலத்துடன் மோதினர். இருப்பினும், இந்தியன் வங்கி அணி வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கொண்டனர். இதனால், அந்த அணி 2-வது காலிறுதியின் முடிவில் 34-25 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இந்தியன் வங்கியின் வீரர் ஹரிராமின் அபார ஆட்டத்தால், 74-64 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியன் வங்கி சார்பில் அதிகபட்சமாக, ஹரிராம் 25 புள்ளிகள், ஜினீப்பென்னி 12 புள்ளிகள், சூர்யா 10 புள்ளிகளும் பெற்றனர்.



இதேபோல, 18-வது சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பைக்கான பெண்கள் கூடைப்பந்து போட்டியில், இந்திய மத்திய ரயில்வே அணியும், தெற்கு ரயில்வே அணியும் மோதின.



பரபரப்பான ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால், 3-வது காலிறுதியின் முடிவில் 47-47 என்ற புள்ளி கணக்கில் சமநிலை பெற்றது. இதையடுத்து, கடைசி காலிறுதியில் இரு அணிகளும் கடுமையாக மோதின. இதில், 57-55 என்ற கணக்கில் தெற்கு ரயில்வே அணி த்ரில் வெற்றி பெற்றது. தெற்கு ரயில்வே அணியின் தர்ஷிணி தொடர் ஆட்டநாயகி விருதை பெற்றார். 



தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ. 50,000மும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு முறையே தலா ரூ. 20,000 மற்றும் ரூ. 15,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.



இதேபோல, பெண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற அணிக்கு ரூ. 50,000, 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ. 25,000மும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு முறையே தலா ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

Newsletter